சி.பி.எஸ்.இ. தேர்வு : சென்னை மாணவர்கள் 98.47% தேர்ச்சி பெற்று அசத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ, தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில், 16 லட்சத்து 21 ஆயிரத்து 224 மாணவ, மாணவிகள் தேர்வெழுதிய நிலையில் 14 லட்சத்து 26 ஆயிரத்து 420 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 99 புள்ளி 91 சதவீதத்துடன் திருவனந்தபுரம் முதலிடத்தையும், 99 புள்ளி 4 சதவீதத்துடன் விஜயவாடா 2வது இடத்தையும் பிடித்துள்ளது. 98 புள்ளி 47 சதவீதம் தேர்ச்சி பெற்று சென்னை மண்டலம், அகில இந்திய அளவில் 3ம் இடத்தை பிடித்துள்ளது. 2023ம் கல்வி ஆண்டை போல 2024ம் ஆண்டு தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகளே 6 புள்ளி 40 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

Night
Day